உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 அறைகள் சேதம்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 அறைகள் சேதம்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் ஞானவேல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு அறைகள் சேதமடைந்தன. தொழிலாளர்கள் சுதாகரித்து வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பெத்துலுபட்டியில் கமலக்கண்ணனுக்கு சொந்தமான ஞானவேல் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற ஆலையில் 90 அறைகள் உள்ளன. இங்கு 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி நெருங்கி வருவதால் இறுதி கட்ட பட்டாசு தயாரிப்பு பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மதியம் 3:30 மணியளவில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது ஒரு அறையில் மருந்துக்கலவையில் ஏற்பட்ட உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டது. சத்தம் கேட்டவுடன் தொழிலாளர்கள் உடன் சுதாரித்து அங்கிருந்து ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் 2 அறைகள் சேதமடைந்தன. சிவகாசி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ