உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகை போராட்டம்

பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகை போராட்டம்

நரிக்குடி : நரிக்குடி பகுதியில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை சரிவர வழங்காததால் விரக்தி அடைந்த விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நரிக்குடி பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. பயிர் காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.450 பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் போதிய மழை இன்றி சரிவர விவசாயம் நடைபெறவில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் பாதிப்படைந்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து வேளாண்துறை, புள்ளியல் துறை, வருவாய் துறை, பாரத ஸ்டேட் வங்கி புள்ளி விவரக் கணக்கு எடுத்தது. இழப்பீட்டுத் தொகையாக ரூ.400 மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. காப்பீட்டுக்காக செலுத்திய தொகையை விட குறைவாக வழங்கியதால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர். ஏமாற்றம் அடைந்த விவசாயிகளுடன் பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் நரிக்குடி வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய முறையில் இழப்பீட்டுத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுட்பட பல கோரிக்கைளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை