புல்வெளியில் தீ
சிவகாசி:சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் புல்வெளியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.சிவகாசி அருகே காளையார் குறிச்சி காட்டுப்பகுதியில் புல்வெளியில் மார்ம நபர்கள் தீ வைத்ததில் தீப்பிடித்து எரிந்தது. பலத்த காற்று அடித்ததால் தீ அப்பகுதி முழுவதும் பரவியது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.