உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி சாத்துார் ரோட்டில் ஓடையில் கொட்டப்பட்டுள்ள குப்பை

சிவகாசி சாத்துார் ரோட்டில் ஓடையில் கொட்டப்பட்டுள்ள குப்பை

சிவகாசி: சிவகாசி சாத்துார் ரோட்டில் சிவகாமிபுரம் அருகே ரோட்டிலும், ஓடையிலும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சிவகாசி சாத்துார் ரோட்டில் சிவகாமிபுரம் அருகே ரோட்டோரத்தில் ஓடை செல்கின்றது. மழைக்காலங்களில் ஓடை வழியாக அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் செல்லும். இந்நிலையில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை அனைத்தும் ஓடையிலும் ரோட்டோரத்திலும் கொட்டப்பட்டுள்ளது. ஓடை முழுவதுமே குப்பையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை பெய்தும் தண்ணீர் செல்ல வழி இல்லை. ஒருவேளை தண்ணீர் சென்றாலும் நீர்நிலைகள் கழிவு நீர் தேக்கமாக மாறி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்நிலையில் இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை காற்றடிக்கும் போது ரோட்டிற்கு வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் ரோட்டிலும் ஓடையிலும் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை