மேலும் செய்திகள்
சி.ஐ.டி.யூ., மாவட்ட மாநாடு
19-Aug-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மாவட்ட விஸ்வகர்மா பொற்கொல்லர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுசீந்திரன், பாண்டியன், ஆறுமுகம் முன்னிலை வசித்தனர். மாவட்டச் செயலாளர் நவிராஜன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் அய்யாசாமி சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். மாநிலத் தலைவர் மருதராஜ் பேசினார். கூட்டத்தில் பொற்கொல்லர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, வீடு வழங்க வேண்டும், தொழில் இல்லாத மாதங்களில் மாதம் 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும், பொற் கொல்லர் நல வாரியத்தின் மூலம் ரூபாய் ஐந்தாயிரம் ஓய்வூதியம் உயர்த்தி தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் துணைச் செயலாளர் மலையப்பன் பாலசுப்பிரமணியன், பாஸ்கரன் கலந்து கொண்டனர். உறுப்பினர் சிவசங்கர் நன்றி கூறினார். - -
19-Aug-2025