அரசு தலைமை மருத்துவமனை கட்டடங்கள் மராமத்து பணி தீவிரம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அரசு தலைமை மருத்துவமனையில் சேதமடைந்த கட்டடங்கள் குறித்தான செய்தி தினமலர் நாளிதழில் வெளி வந்ததையடுத்து பணிகள் தீவிரமாக நடக்கிறது. அருப்புக்கோட்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தரம் பல ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்ட நிலையில், வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் நோயாளிகள் பயத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள் மராமத்து பணிக்காக 1 .40கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் பணி நடைபெறாமல் இருந்ததை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் செய்தி வெளி வந்தது. இதையடுத்து, வெளி நோயாளிகள் பிரிவு உள்ள சேதமடைந்த கட்டடம் பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. மற்ற கட்டடங்களுக்கு சாரம் கட்டும் பணி நடக்கிறது. புதியதாக அனைத்து வசதிகள் கொண்ட 6 மாடி கட்டடம் திறக்கப்படாமலேயே உள்ளது. அரசு கட்டிடத்தை விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.