மேலும் செய்திகள்
கல்லுாரி பட்டமளிப்பு விழா
26-Sep-2025
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஐ.பி.எம்., நிறுவனத்தின் மூத்த தலைமை அதிகாரி ஜோதிசேகரன் கலந்து கொண்டு 180 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின் அவர் பேசியதாவது: இளம் பொறியாளர்கள் புதுமை, நேர்மை, தன்னம்பிக்கையுடன் தொழில்துறையில் தங்களை நிலை நிறுத்தி சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என, வலியுறுத்தினார். கல்லுாரி முதல்வர் அருள்மொழி வரவேற்றார். நிர்வாக குழு தலைவர் முருகேசன், செயலாளர் வெள்ளைசாமி, பொருளாளர் ராஜேந்திரன், சொக்கலிங்கபுரம் தேவாங்கர் வர்த்தகர் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறை தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்தனர்.
26-Sep-2025