உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எம்.ஜி.ஆர்., சாலை வளைவில் கிடக்கும் ஜல்லி கற்களால் விபரீதம்

எம்.ஜி.ஆர்., சாலை வளைவில் கிடக்கும் ஜல்லி கற்களால் விபரீதம்

விருதுநகர்: விருதுநகர் எம்.ஜி.ஆர்., சாலையில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் திரும்பும் வளைவில் கொட்டிக் கிடக்கும் ஜல்லிக் கற்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் எம்.ஜி.ஆர்., சாலையை அகலப்படுத்தும் பணிகள் ஆமைவேகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இதன் வளைவு முக்கிய பகுதியாக உள்ளது. தினசரி நுாற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் வளைவில் தற்போது ஜல்லி கற்கள் கொட்டி விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நான்கு வழிச்சாலையில் செல்லும் டூவீலர் வாகன ஓட்டிகள் ஊருக்குள் வர முயன்றால் இவ்வழியை தான் பயன்படுத்த வேண்டும். அதே போல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வருவோர் இந்த வழியாக தான் ஊருக்குள் நுழைய முடியும். இத்தகைய சூழலில், பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஜல்லிக்கற்கள் கொட்டி சிதறியுள்ளன. சாலை விரிவாக்கத்திற்காக கொட்டப்பட்ட இவை தான் தற்போது பரப்பி உள்ளன. அந்த பணிகளும் நடக்காமல் தாமதித்து வருகின்றன. எனவே விரைந்து பணியை முடிந்து சறுக்கி விழுந்து விபத்தை சந்திப்பதை தடுக்க ஜல்லிக் கற்களை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !