வழிகாட்டி பயிற்சி
சிவகாசி: சிவகாசி காக்கிவாடன்பட்டி கே.ஆர்.பி. கலை, அறிவியல் கல்லுாரியின் வேலைவாய்ப்பு துறை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் சிறப்பு தொழில்நெறி வழிகாட்டிப் பயிற்சி நடந்தது. கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். முதல்வர் ராம் ஜெயந்தி முன்னிலை வகித்தார். வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர் உஷா ஷாலினி வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலர் பிரியதர்ஷினி, அரசு பணியில் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து பேசினார். தமிழ் துறைத் தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார். அனைத்து மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்புத் துறை செய்தனர்.