உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

திருச்சுழி:திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. எம். ரெட்டியபட்டியில் பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு நிலையம், கூடுதல் ஏடிஎம் வசதி, உழவர் சந்தை அமைக்கவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தவும், கால்நடை மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் நிரந்தரமாக இருப்பு வைத்திருக்கவும், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் செய்யவும், ஊருணியில் உள்ள கருவேல மரங்களை அப்புறப்படுத்தவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். நிர்வாகிகள் பெரியண்ண குருசாமி, சங்கரபாண்டி, தங்கராஜ், ஜீவானந்தம், பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை