உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் வாங்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் வாங்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு

அருப்புக்கோட்டை : மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடைய குறைகளை மனுவாக பெற்று உங்களுடன் முதல்வர் முகாமில் உடனடியாக தீர்வு காணப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.அருப்புக்கோட்டை அருகே ஆமணக்கு நத்தம் கிராமத்தில் உங்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுகபுத்திரா தலைமை வகித்தார். முகாமை துவக்கி வைத்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: நம் முதல்வர் மக்களை தேடி அதிகாரிகளை போகச் சொல்கிறார். மக்களின் குறைகளை கேட்டு அவற்றை மனுவாக பெற்று குறிப்பிட்ட நாளில் தீர்வு காண உத்தரவிட்டுள்ளார். இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகள் அலுவலர்கள் வந்துள்ளனர். அந்தந்த துறையில் மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை மனுவாக கொடுத்து அதற்கான தீர்வு குறிப்பிட்ட நாட்களுக்குள் கிடைக்கும். விடுபட்ட மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் மனு கொடுக்கலாம். என்று பேசினார். முகாமில் ஆமணக்குநத்தம், குருந்தமடம், வெள்ளையாபுரம் உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.*நரிக்குடி ஆலடிப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முகாம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். எம்.பி., நவாஸ் கனி முன்னிலை வகித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்து பேசியதாவது,மாவட்டத்தில் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. நகர் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. மக்களின் கருத்துக்களை உள்வாங்கி குறைகளை நிவர்த்தி செய்ய ஒரு லட்சம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். துண்டு பிரசுரம், விண்ணப்பங்கள் மூலம் மக்களிடம் கலந்துரையாடி, தேவையான திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பயனடைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் விண்ணப்பங்கள் அளிக்கலாம். தகுதி அடிப்படையில் 45 நாட்களுக்குள் உரிய தீர்வு எட்டப்படும். அனைவரும் குறைகளை முகாமில் தெரிவித்து பயன்பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !