ஊக்கத்தொகை வழங்கல்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வர்த்தக சங்கம் சார்பில் சங்க பொன்விழா ஆண்டு, பள்ளி குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா, பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். தலைவர் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் காசிமுருகன் வரவேற்றார். செயலாளர் பாபு ஆண்டறிக்கை, வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்தார். உறுப்பினர்களின் குழந்தைகளில் 10ம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இணைச்செயலாளர் சந்திரசேகர், நிர்வாக குழு உறுப்பினர்கள் நவிராஜன், கண்ணன், பழனிவேல், சாகுல்ஹமீது, மயில் ராஜன், நிர்வாகிகள் வியாபாரிகள் கலந்து கொண்டனர். புதிய தலைவராக சுதாகர், செயலாளராக பாபு தேர்வு செய்யப்பட்டனர்.