| ADDED : ஜன 28, 2024 06:30 AM
விருதுநகர், : விருதுநகர் - மதுரை ரோட்டில் அமைக்கபட்ட போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.விருதுநகர் நகராட்சியின் முக்கியப் பகுதிகளில் வாகனங்களில் வேகமாக செல்வதால் ஏற்படும் விபத்தை தவிர்பதற்காக பள்ளி, கல்லுாரி, நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதிகள், மக்கள் அதிகமாக ரோட்டை கடக்கும் பகுதிகளில் போலீசார் புதியதாக சிக்னல்கள் அமைத்தனர்.விருதுநகர் - மதுரை ரோட்டில் புதியதாக இரண்டு சிக்னல்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டது. இவை முறையாக பராமரிக்கப்படாததால் செயல்படாமல் உள்ளது. இதனால் விருதுநகர் - மதுரை ரோட்டில் வாகனங்களில் வேகமாக செல்கின்றனர்.இதனால் பாவாலி ரோடு வழியாக வரும் பஸ், லாரி, வேன், கார், ஆட்டோ உள்ளிட்டவை மதுரை ரோட்டில் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து நிகழ்கிறது.இந்த ரோட்டில் இரவு நேரத்தில் இளைஞர்கள் பைக் வீலிங் செய்து, வேகமாக செல்வதால் சக வாகன ஒட்டிகள் அச்சுத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே சிக்னல்களை முறையாக பராமரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.