உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு விழாக்களில் கட்சி அலங்கார வளைவுகள் அதிகரிப்பு: அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா

அரசு விழாக்களில் கட்சி அலங்கார வளைவுகள் அதிகரிப்பு: அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா

மாவட்டத்தில் தற்போது வளர்ச்சி பணிகள், புதிய கட்டடங்கள், அரசு அலுவலகங்களின் கட்டுமான பணிகள் அதிகம் நடக்கின்றன. இவை முடிந்து திறப்பு விழா நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள அனைத்து அரசு நிர்வாக பணிகளில் கட்சி சாயல் இருக்க கூடாது. ஆனால் தற்போது கட்சிகளின் பலுான் அலங்கார வளைவுகள், கொடிகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அதுவும் வி.ஐ.பி.,க்கள் வந்து விட்டால் ரோட்டின் இருபுறமும் கொடி கட்டுகின்றனர்.ரோட்டை தாண்டி தாண்டி தற்போது கட்சியினர் திறப்பு விழா நடக்குமிடத்திலும் கட்சி அலங்கார வளைவுகளை பயன்படுத்துகின்றனர். இதை அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது போன்ற செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தி அடைகின்றனர். கட்சி பாகுபாட்டை அப்பட்டமாக வெளியே காட்டுவதால் மக்கள் அச்சத்துடனே அலுவலகங்களை அணுகும் சூழல் ஏற்படும். அனுமதித்த அதிகாரிகள் மீது நம்பிக்கையும் போகும்.நேற்று ராஜபாளையத்தில் நடந்த புதிய ஊராட்சி ஒன்றிய கட்டடத்தின் திறப்பு விழா நடந்தது. இதில் கட்டட வாயிலில் ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. இது போன்று அமைக்க எவ்விதத்திலும் அனுமதி கிடையாது.இது போன்ற செயல்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசு நிர்வாகம் என்பது பொதுமக்கள் பயன்பாட்டிற்கானது. இதில் தனிப்பட்ட கட்சி அடையாளங்களை கொண்டு வருவதால் சராசரி மக்கள் தயக்கம் காட்டும் சூழல் உள்ளது.அரசு விழாக்களில் கட்சிகளின் அலங்கார வளைவுகளை பயன்படுத்த அனுமதியில்லை என்ற விதியை மாவட்ட நிர்வாகம் கடுமையாக பின்பற்ற வேண்டும். அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து முன்மாதிரியாக செயல்பட வேண்டும். தவறும் பட்சத்தில் வரும் நாட்களிலும் அரசு விழாக்களில் கட்சியினரின் அத்துமீறல் தொடரும் வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !