ஜெய்சங்கர கணபதி கோயில் கும்பாபிஷேகம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஜெய்சங்கர கணபதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.அருப்புக்கோட்டை சங்கர் மருத்துவமனை வளாக ஜெயசங்கர கணபதி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் இரவு அனுக்ஞை, தீர்த்த சம்ஹரணம், கட ஸ்தாபனம், கும்ப அலங்காரம், வாஸ்து சாந்தி, கணபதி பூஜை, லட்சுமி பூஜை, பஞ்ச சூக்த பாராயணம் நடந்தது. நேற்று காலை புண்ணியாஹாவாசனம், பிம்ப சுத்தி, கும்ப பூஜை, ம்ருத்யுஞ்ச ஹோமம், தன்வந்திரி, சுதர்சனம், சகல தேவதா காய்த்ரி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது. யாத்ரா தானம், கடம் புறப்பாடு, பின்னர் ஜெய சங்கர கணபதிக்கு அஷ்டகோடி திரவியங்களால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ஏற்பாடுகளை சங்கர் மருத்துவமனை டாக்டர் ஜெய்சங்கர், இயக்குநர்கள் சித்ரா, வர்ஷா, டாக்டர் ஆனந்த் சங்கர் மற்றும் குடும்பத்தினர், மருத்துவமனை ஊழியர்கள் செய்தனர். அன்னதானம் நடந்தது.___படம் உள்ளது