தேசிய தரவரிசை பட்டியலில் கலசலிங்கம் பல்கலை சாதனை
ஸ்ரீவில்லிபுத்துார்:மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்ட தர வரிசை பட்டியலில் நாட்டில் 28வது இடத்தை பெற்று கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை சாதனை படைத்துள்ளது. இது குறித்து பல்கலை நிர்வாகத்தின் செய்திக் குறிப்பு: என்.ஐ.ஆர்.எப் 2025 தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். இதில் பல்கலை அளவில் கலசலிங்கம் பல்கலை 28வது ரேங்க், பொறியியல் பிரிவில் 33வது ரேங்க், அனைத்து பிரிவு கல்வி நிறுவனங்களில் 48வது ரேங்க், புதுமையை புகுத்தி புதிய கண்டுபிடிப்பில் 11 முதல் 30-வது ரேங்க், நிலையான வளர்ச்சி இலக்குகளை கொண்ட கல்வி நிறுவனங்களில் 11 முதல் 50 தரவரிசையை பெற்றுள்ளது. சாதனைக்கு பாடுபட்ட துணை வேந்தர், பதிவாளர், இயக்குனர்கள், டீன்கள், பேராசிரியர்கள், அலுவலர்களை வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகி, துணைத்தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம் பாராட்டினர்என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.