உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் படை வீரர்களுக்கு சட்ட உதவி மையம்

முன்னாள் படை வீரர்களுக்கு சட்ட உதவி மையம்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்துார் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் சட்ட உதவி மையம் துவக்க விழா நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி அகிலாதேவி துவக்கி வைத்து பேசுகையில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு முன்னாள் படை வீரர்களுக்காக வீர் பரிவார் சகாயத யோஜனா 2025 என்ற திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு திறக்கப்பட்டுள்ள இந்த உதவி மையம் புதன் கிழமை தோறும் செயல்படும். இதனை முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி தங்களின் சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத பிரச்சனைகளுக்கு சட்ட ஆலோசனை பெறலாம் என்றார். விழாவில் உதவி இயக்குனர் அலுவலக அதிகாரிகள், முன்னாள் படை வீரர்கள், வழக்கறிஞர்கள், சட்ட தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை