உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செயல் அலுவலர் மீதான கோபத்தில் கோயில் வாகனத்திற்கு தீ வைத்தவர் கைது

செயல் அலுவலர் மீதான கோபத்தில் கோயில் வாகனத்திற்கு தீ வைத்தவர் கைது

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல் அலுவலர் மீதான கோபத்தில் கோயில் சுவாமி வாகனத்திற்கு தீ வைத்த கண்ணன் 58, என்பவரை போலீசார் கைது செய்தனர்.ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. கோயில் மூலஸ்தானம் பின்புற அறையில் இருந்த மரத்தாலான ரிஷப வாகனம் தீயில் எரிந்தது. பக்தர்கள் தீயை அணைத்தனர்.இது தொடர்பாக டி.எஸ்.பி., ராஜா தலைமையில் போலீசார் ராஜபாளையம் பூபதி பேங்க் தெருவை சேர்ந்த கண்ணன், என்பவரை கைது செய்தனர். போலீசார் கூறுகையில் 'கண்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதுடன் கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகளை சொந்த செலவில் செய்து வந்துள்ளார். புதிதாக பொறுப்பேற்ற செயல் அலுவலர் ராஜேஷ் ,தனி நபர்கள் சார்பில் எந்த பணியையும் செய்யக்கூடாது என்றதுடன் அவர் சார்பில் கோயிலில் வைத்திருந்த பீரோ, இதர பொருட்களை உடனே காலி செய்யுமாறு நிர்பந்தித்துள்ளார்.அவர் மீதான கோபத்தில், அவருக்கு பிரச்னை ஏற்படுத்த பெட்ரோல், பட்டாசுகளை வாங்கி வந்து தீ வைத்ததை கண்ணன் ஒப்புக்கொண்டார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ