உள்ளூர் செய்திகள்

அமைச்சர் ஆய்வு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அருப்புக்கோட்டை - மதுரை ரோட்டில் உள்ள நகராட்சி பஸ் ஸ்டாண்ட் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இடித்துவிட்டு புதியதாக கட்டும் பணி நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக மந்த கதியில் பணி நடந்து வருகிறது. அமைச்சர் புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று ஆய்வு செய்தார். விரைவாக பணிகளை முடிக்க அறிவுறுத்தினார். உடன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், நகராட்சி முன்னாள் தலைவர் சிவப்பிரகாசம், துணை தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் ராஜமாணிக்கம், தி.மு.க., நகர செயலாளர் மணி, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை