உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., திருவண்ணாமலையில் குரங்குகள் அட்டகாசம்

ஸ்ரீவி., திருவண்ணாமலையில் குரங்குகள் அட்டகாசம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்த சில குரங்குகள் கடந்த சில மாதங்களாக அடிவாரம் முதல் கோயில் வரை பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து வருகிறது. துவக்கத்தில் பக்தர்கள் தரும் பழங்கள், உணவு பொருள்களை ருசி பார்த்து வந்த குரங்குகள் தற்போது அடிவாரம் கடைகளில் விற்பனைக்கு வைத்திருக்கும் பழங்களையும், பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய் பழம் அர்ச்சனைதட்டையும் பறித்து செல்கிறது. ஒரு சில முறை பக்தர்களின் அலைபேசியையும் பறித்து சென்றுள்ளது. சில சமயம் குரங்குகள் சண்டை இட்டுக் கொள்வதுபக்தர்களை அச்சப்பட வைக்கிறது.எனவே, அடிவாரம் முதல் கோயில் வரை குரங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையும், கோயில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை