உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்: தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பேட்டி

இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்: தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பேட்டி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற அதன் மாநிலத் தலைவர் அப்துல் கரீம் அளித்த பேட்டி: இஸ்லாமிய சமூகத்தினர் இடையே நிலவும் மூடநம்பிக்கைகளை களைந்து அறிவியல் பூர்வமாகவும், இஸ்லாம் வலியுறுத்துகிற ஒழுக்கம் மாண்புகளை கடைபிடித்தும் வாழ்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த மாநாடு நடக்கிறது. பல்கலை துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிக்கும் யு.ஜி.சி., விதிமுறையை திருத்தியதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்குபவர்களுக்கே இஸ்லாமியர்கள் ஆதரவு தெரிவிப்பர்.சட்டம் ஒழுங்கு பிரச்னையை தமிழக அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வட மாநிலங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு கொந்தளிப்பது போல் சென்னை அண்ணா பல்கலையில் நடந்த சம்பவத்தின் பின்புலத்தில் உள்ளவர்கள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை