உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எனது பேச்சு மிகைப்படுத்தப்பட்டுள்ளது: விருதுநகர் எஸ்.பி., விளக்கம்

எனது பேச்சு மிகைப்படுத்தப்பட்டுள்ளது: விருதுநகர் எஸ்.பி., விளக்கம்

விருதுநகர்; விருதுநகர் அரசு மருத்துவமனையில் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் உடல்களை வாங்க மறுத்த உறவினர்களிடம் இதுக்கு மேல ஒழுங்கா இருக்கணும், கோஷம் போட்டா வேற மாதிரி ஆகிடும்', என எஸ்.பி., கண்ணன் எச்சரித்தது சர்ச்சையானது. இதுகுறித்து 'எனது பேச்சு மிகைப்படுத்தப்பட்டுள்ளது' என எஸ்.பி., விளக்கமளித்துள்ளார்.இது குறித்து எஸ்.பி.,யின் விளக்க அறிக்கை:பட்டாசு விபத்தில்பலியான 9 பேரின் உடல்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கும், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது. மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணமாக தலா ரூ. 4 லட்சம் அறிவித்தது. ஆனால் நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி நேற்று முன்தினம் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் திரண்டு சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு இடையூறாக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களிடம் வருவாய்த்துறை, போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போதும் ரோட்டில் மறியலில் 200 பேர் ஈடுபட்டனர். அப்போது போலீசார் எச்சரிக்கையால் மீண்டும் மருத்துவமனை வளாகத்திற்குள் உறவினர்கள் வந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணங்களை உடனடியாக பெற்றுத்தர அனைத்து சட்ட நடவடிக்கைகளும் விரைவாக எடுக்கப்படுகிறது.நோயாளிகள், மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ரோடு மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரித்து போராட்டத்தை கைவிட அறிவுறுத்தியதை மிகைப்படுத்தி செய்தியாக்கியுள்ளனர்.

9 பேரின் உடல்களை பெற்று சென்ற உறவினர்கள்

பட்டாசு ஆலை விபத்து நடந்த ஜூலை1ல் விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்து வைரமணி, மகாலிங்கம் உடல்களையும், நேற்று முன்தினம் புண்ணியமூர்த்தி, நாகபாண்டி உடல்களையும், சிவகாசி அரசு மருத்துவமனையில் ராமமூர்த்தியின் உடலையும் உறவினர்கள் பெற்றுச் சென்றனர். நேற்று விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்த லட்சுமி, செல்லபாண்டி, ராமஜெயம் உடல்களையும், சிவகாசி அரசு மருத்துவமனையில் லிங்கசாமி உடலையும் உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhaskaran
ஜூலை 09, 2025 10:07

மருத்துவமனை மக்கள் நடக்கும் பாதை போன்றவற்றில் மறியல் செய்தால் காவல்துறை சும்மா விடுவாங்களா


சகுரா
ஜூலை 04, 2025 21:59

அப்போ சாதாரண மக்களிடம் தன்மையா பேச கத்துக்கோங்க. மக்களுக்கு சேவை செய்யத்தான் மக்கள் வரியிலிருந்து உங்களுக்கு சம்பளம் கொடுக்கறாங்க என்பதை எப்போதும் நியாபகம் வெச்சக்கனும்.


கண்ணன்
ஜூலை 04, 2025 11:41

தெலுங்கானா தொழிற்சாலை விபத்தில் பலியான முப்பது பேருக்குத் தலைக்கு ஒரு கோடி கொடுத்துள்ளது அந்த மாநில அரசு. அதும் புள்ளிக்கூட்டணயில்தானே உள்ளது?


பேசும் தமிழன்
ஜூலை 04, 2025 08:20

தொழில் செய்யும் போது இறந்தால் 4 லட்சம்.. அதே கள்ள சாராயம் குடித்து செத்தா 10 லட்சம்.. இது தான் விடியாத மாடல் அரசு போல் தெரிகிறது.


Sadananthan Ck
ஜூலை 04, 2025 17:00

அதுதான் திராவிட மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை