நாலுார் சேதமான வணிக வளாகம் இயற்கை சந்தையாக மாற்றம்
நரிக்குடி : நரிக்குடி நாலுாரில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சேதமடைந்த வணிக வளாகக் கடைகள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் இயற்கை சந்தையாக மாற்றி அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.நரிக்குடி நாலுாரில் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறை, மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து ஏற்படுத்திய கிராம இயற்கை சந்தையை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.இயற்கை சந்தையை பயன்படுத்தி ஓராண்டுகளில் மகளிர் உறுப்பினர்கள் பொருளாதாரத்தில் வலிமை பெற்றவர்களாக மாற முடியும் என கலெக்டர் தெரிவித்தார். வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜார்ஜ் மைக்கேல், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்உட்பட பலர் கலந்து கொண்டனர்.