மேலும் செய்திகள்
பள்ளி கல்லுாரி செய்திகள்
14-Sep-2025
ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் பழங்குடியினர் பற்றி இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் ஆங்கில துறையுடன் இணைந்து நடைபெற்ற கருத்தரங்கில் 'தென்னிந்திய பழங்குடியின வழிபாட்டு விழாக்கள், சடங்குகள், வாய்மொழி பாரம்பரிய நோக்கில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் கட்டுரை தொகுப்பு நுால் வெளியிடப்பட்டது. ஆங்கிலத் துறை பேராசிரியர் சுவாதி முத்து வரவேற்றார். முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஐ.சி.ஹெச்.ஆர் ஆய்வின் துணை இயக்குனர் நித்தின் குமார், ஜவகர் லார் நேரு பல்கலை வரலாற்று மைய பேராசிரியை கவுரி தேய், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை ஜெயப்பிரியா, விருதுநகர் ஸ்ரீவித்யா இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் ராஜாராம் பேசினர். நுாற்றுக்கும் அதிகமானோர் ஆய்வு கட்டுரை வாசித்தனர். ஆங்கிலத்துறை தலைவர் சுகன்யா நன்றி கூறினார்.
14-Sep-2025