புதுமுக நிகழ்வு
சிவகாசி:சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம், மாணவர் பேரவை, மாணவர் நலன் சேவை சார்பில் இளம் மாணவர்களுக்கான புதுமுக நிகழ்வு நடந்தது. கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா வழி நடத்தினர். பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். தன்னம்பிக்கை பேச்சாளர் அன்ன பாரதி பேசினார். கல்லுாரி விதிமுறைகள், மாணவர்களுக்கு வழங்கும் சான்றிதழ் டிப்ளமோ படிப்புகள், வேலை வாய்ப்பு நல்கும் திறன் மேம்பாட்டு படிப்புகள், பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்கள், மாணவிகள் பெற்றோர் பங்கேற்றனர். கல்லுாரி மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் மங்கையர்கரசி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் செய்தனர்.