உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடியிருப்பு அருகே பட்டாசு ஆலை வேண்டாம்

குடியிருப்பு அருகே பட்டாசு ஆலை வேண்டாம்

விருதுநகர்: பட்டாசு வெடி விபத்தால் ஏற்கனவே, வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் புதிய பட்டாசு ஆலையை குடியிருப்பு அருகே திறக்க அனுமதிக்க கூடாது என கீழ ஒட்டம்பட்டி மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அம்மனுவில் கூறியதாவது : சாத்துார் அருகே கீழ ஒட்டம்பட்டி. இங்கு 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 2024 செப். 28ல் திருமுருகன் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, தற்போது அதே குடியிருப்பு அருகே சந்தனமாரி என்ற பெயரில் புதிய பட்டாசு ஆலையை திறப்பதற்கு முயற்சி நடக்கிறது. எனவே, அதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை