உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  குழந்தைகளுடன் செவிலியர்கள் போராட்டம்

 குழந்தைகளுடன் செவிலியர்கள் போராட்டம்

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில், நேற்று ஆறாவது நாளாக நடந்த காத்திருப்பு போராட்டத்தில், பச்சிளம் குழந்தைகளுடன் செவிலியர்கள் பங்கேற்றனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓராண்டிற்கு மேல் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் டிச. 18 முதல் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. நேற்று நடந்த போராட்டத்திற்கு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். செயலாளர் சங்கீதா, செயற்குழு உறுப்பினர் வனிதா முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா ஆதரவாக பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !