உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கழிவு பட்டாசு வெடித்து ஒருவர் காயம்

கழிவு பட்டாசு வெடித்து ஒருவர் காயம்

சாத்துார்:தாயில்பட்டி எஸ்.பி.எம். தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் 52. கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பேத்கர் நகரில் இவரது வீட்டை சோதனை செய்த போலீசார் சோல்சா வெடிகளை பறிமுதல் செய்தனர். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்துவிட்ட நிலையில் இந்த தகர செட்டில் ஆங்காங்கே பட்டாசு மூலப் பொருட்களும் சோல்சா பட்டாசுகளும் சிதறி கிடந்துள்ளன. காலையில் தகர செட்டை அகற்றும் பணியில் மைக்கேல்ராஜ் , தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். காலை 11:30 மணிக்கு தகர செட்டில் வெல்டிங் வைத்து தொழிலாளர்கள் தகரத்தை அகற்றிய போது தகர செட்டுக்குள் கிடந்த பட்டாசு கழிவில் தீ பற்றியது. இதில் மைக்கேல் ராஜ் 90 சதவீதம் தீ காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ