உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு கால்நடை மருத்துவமனையில் திறந்தவெளிக் கிணறால் அபாயம்

அரசு கால்நடை மருத்துவமனையில் திறந்தவெளிக் கிணறால் அபாயம்

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் நடுவே அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளியாக உள்ள கிணறால் கால்நடைகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. தகுந்த பாதுகாப்பு அமைக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ராஜபாளையம் சாந்தி சிலை ரவுண்டானா அருகே முடங்கியார் ரோட்டில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. ராஜபாளையம் வகை நாய்களுக்கு பெயர் பெற்ற இடமாக இருப்பதால் தினமும் வளர்ப்பு நாய்கள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பூனை போன்ற பிராணிகள் வளர்ப்போர் அதிகம். இந்த கால்நடை மருத்துவமனை நுழைவாயில் ஒட்டி பெரிய அளவிலான இரண்டடி உயர சுற்றுச்சுவர் உடன் தகுந்த பாதுகாப்பு இன்றி திறந்த வெளி கிணறு அமைந்துள்ளது. இதை ஒட்டி அரசின் உழவர் சந்தை, தனியார்சந்தை, ஆட்டோ ஸ்டாண்ட், மெயின் ரோடு என மக்கள் பெருக்கம் அதிகம் உள்ள பகுதியாக உள்ளதால் நடமாட்டம் அதிகம். இந்நிலையில் உயரம் குறைந்த உயரம் உடைய சுற்றுச்சுவருடன் மூடப்படாமல் கிணறு அமைந்துஉள்ளதால் சிகிச்சைக்காக கொண்டு வரப்படும் பிராணிகள் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் முன் இரும்பு மூடி அமைத்து பாதுகாக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ