உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பழைய பஸ் ஸ்டாண்டில் செயல்பாட்டிற்கு வராத புறக்காவல் நிலையம்

பழைய பஸ் ஸ்டாண்டில் செயல்பாட்டிற்கு வராத புறக்காவல் நிலையம்

ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா கண்டு ஒன்பது நாள் ஆகியும் இதுவரை புற காவல் நிலையம் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது.சுற்றிலும் டாஸ்மார்க் கடைகளுடன் குடிமகன்கள் தொல்லை உள்ளதால் இரவு பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரூ. 3.40 கோடி மதிப்பில் மே 29ல் திறக்கப்பட்டுள்ளது. தினமும் 50 டவுன் பஸ்களுடன் 300க்கும் அதிகமான டிரிப்கள் வந்து செல்லும்.தொடங்கி 9 நாட்கள் கடந்தும் பஸ் ஸ்டாண்ட் முன்பு அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையம் செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளது.இதனால் பெண் பயணிகள் குறிப்பாக இரவு நேரத்தில் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். விரைவில் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து முத்தீஸ்வரன்: ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்து தாமதமாக திறப்பு விழா நடந்தும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படையில் வசதிகள் செய்து தரப்படவில்லை.பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் குடிமகன்கள் ஒதுங்கும் இடமாக மாற்றி உள்ளனர்.இந்நிலையில் இரவு 12:00 மணிக்கும் அதிகாலை 4:00 மணிக்கும் பஸ்கள் வந்து செல்லும் நிலையில் பெண்கள் பாதுகாப்பற்று உள்ளனர். பயணிகள் நிலை அறிந்து உடனடி நடவடிக்கை தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை