உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோடு சேதம், பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி வேதனையில் பேராபட்டி மக்கள்

ரோடு சேதம், பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி வேதனையில் பேராபட்டி மக்கள்

சிவகாசி: ரோடு சேதம், துார்வாராத வாறுகால் , கட்டி 6 ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத மேல்நிலைக் குடிநீர் தொட்டி உட்பட எண்ணற்ற பிரச்னைகளால் அனுப்பன்குளம் ஊராட்சி பேராபட்டி மக்கள் வேதனையடைந்துள்ளனர். சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சி பேராபட்டியில் ரோடு சேதம் முக்கிய பிரச்னையாக உள்ளது. அனுப்பன்குளத்திலிருந்து பேராபட்டி செல்லும் ரோடு 7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது இந்த ரோடு முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் எந்த வாகனமும் எளிதில் சென்று வர முடியவில்லை. வாறுகால் தூர்வாராததால் கழிவுநீர் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. பேராபட்டி நுழைவுப் பகுதியில் உள்ள கோயில் அருகே காலி இடம் திறந்த வெளி பாராக மாறியதால் பெண்கள் நடமாட முடியவில்லை. சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராததால் பெண்கள் அவதிப் படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை