பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் பாரதீய தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாமல், தொழிலாளர் விரோதப்போக்கினை கடை பிடிக்கும் மதுரை கோட்டம் விருதுநகர் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து மண்டல தலைவர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாரதீய போக்குவரத்து தொழிற்சங்க பேரவை மாநில பொதுச்செயலாளர் சதீஸ்குமார், பி.எம்.எஸ்., மாவட்ட செயலாளர் கணேசன், முன்னாள் பேரவை பொதுச் செயலாளர் கணேசன், மதுரை, காரைக்குடி பொதுச்செயலாளர்கள் லட்சுமணன், ரெங்கநாதன், முன்னாள் பேரவை பொதுச்செயலாளர் கணேசன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்ற னர்.