உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ராணுவ வீரர் வீட்டில் திருட்டு ஸ்ரீவில்லிபுத்தூர்: பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் கண்ணன். ராணுவ வீரர். இவரது மனைவி லட்சுமிதேவி. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு, திரும்ப வந்து பார்க்கும்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த சேமிப்பு பணம் ரூ.10 ஆயிரம், வெள்ளிக் கொலுசு திருடுபோயுள்ளது. போலீசார் விசாரிக்கிறார். இருவர் கைது விருதுநகர்: சிவகாசி அருகே வடமலாபுரத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் 35, சூர்யா, சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் முனிஷ்குமார் 24. இவர்கள் மூவரும் காரிசேரியில் புறம்போக்கு ஓடையில் மண்ணை மண் அள்ளும் இயந்திரத்தின் மூலமாக டிராக்டரில் கடத்தினர். ஆமத்துார் போலீசார் இருவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். வாட்ச்மேன் பலி விருதுநகர்: விருதுநகர் மேலரதவீதி பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் 40. இவர் விருதுநகரில் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் வாட்ச்மேனாக பணிபுரிந்தார். நேற்று பணிக்கு சென்றவருக்கு மாலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனது அறைக்கு சென்று அமர்ந்தார். மாலை 4:30 மணிக்கு சகஊழியர்கள் சென்று பார்த்த போது பலியானது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர். வாகனம் மோதி பலி காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சி அருகே மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை