உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் போலீசார் எச்சரித்தும் அலட்சியம்

பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் போலீசார் எச்சரித்தும் அலட்சியம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டில் தொங்கிச் செல்வது தொடர்பாக போலீசார் எச்சரித்தும் அலட்சியமாக உள்ளனர்.அருப்புக்கோட்டையில் பள்ளிகள், கல்லூரிகளில் மேற்படிப்பிற்காக அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்க வருகின்றனர். மாணவர்கள் வந்து செல்ல தேவையான பஸ் வசதிகள் இருந்தும் ஒரு சில பஸ்களில் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டில் தொங்கி செல்கின்றனர். மாலை நேரங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடும் நேரத்தில் தங்கள் ஊருக்கு செல்ல மாணவர்கள் பஸ்களில் கூட்டம் இருந்தாலும், கூட்டம் இல்லை என்றாலும் பஸ் படிக்கட்டில் தொங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.நேற்று முன்தினம் மாலை காந்தி நகர் பகுதியில் தனியார் பஸ்ஸில் மாணவர்கள் தொங்கி செல்வதை அங்கிருந்த சிறப்பு எஸ்.ஐ., பஸ்சை நிறுத்தி படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை எச்சரித்து அனுப்பியும் கண்டு கொள்ளாமல் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே சென்றனர். பெற்றோர் பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு பஸ்களின் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வது ஆபத்தான பயணம் என அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை