மாணவனுக்கு பாராட்டு
சிவகாசி : கோவையில் நடந்த கராத்தே உலக சாதனைப் போட்டியில் சிவகாசி செங்கமல நாச்சியார்புரம் எல்.வி.ஆர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவன் கண்ணன் 8, 45 நிமிடங்கள் இடைவிடாது கராத்தே செய்து சாதனை புரிந்து சான்றிதழ் பெற்றார். மேலும் விருதுநகரில் நடந்த நோவா உலக சாதனையில் 21 சுற்றுகள் 60 நிமிடங்கள் இடைவிடாது நடந்த சிலம்பம் போட்டியில் பங்கேற்று சாதனை புரிந்தார். சாதனை புரிந்த மாணவனை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ஆசிரியர்கள் பாராட்டினர்.