மேலும் செய்திகள்
போலீசுக்கு டிமிக்கி கொடுத்த ரவுடி கைது
23-Sep-2025
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பலாத்கார வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான அசாமை சேர்ந்த கம்ருதீன் இஸ்லாம் 24, என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த கமருதீன் இஸ்லாம் 2021ல் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மல்லியிலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். அப்போது உடன் வேலை செய்த பெண்ணுடன் பழகி பலாத்காரம் செய்தார். ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார் அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. சில மாதங்களாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி தப்பி சென்றார். அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அசாம் சென்று அங்கு பதுங்கியிருந்த கம்ருதீன் இஸ்லாமை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
23-Sep-2025