முதியோர் வீட்டுக்கு ரேஷன் பொருட்கள்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் செப். 13, செப். 14ல் 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. இனி வரும் ஒவ்வொரு மாதத்தின் 2வது சனி, ஞாயிறுகளில் பயனாளிகளுக்கு அவரவர் வீடுகளுக்கு நேரில் வந்து ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். எனவே தகுதியுடைவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.