சிவகாசி பஸ் ஸ்டாண்டில் சேதமான தளம் சீரமைப்பு
சிவகாசி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி பஸ் ஸ்டாண்டில் சேதம் அடைந்திருந்த தரை தளம் சீரமைக்கப்பட்டு மழை நீர் வெளி யேறும் வகையில் வாறுகால் அமைக்கப்பட்டது. சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 200 க்கும் மேற்பட்ட முறை அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்துமிடம், தரைதளம் சேதம் அடைந்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைக்க பட்டது. ஆனால் தற்போது பஸ் ஸ்டாண்டில் தரைதளம் சமமாக இல்லாமல் ஆங்காங்கே சேதம் அடைந்து, கற்கள் பெயர்ந்து இருப்பதால் வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகின்றது. மழைக்காலங்களில் சேதம் அடைந்த இடங்களில் தண்ணீர் தேங்கியும் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே பஸ் ஸ்டாண்டில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சேதம் அடைந்திருந்த தளம் சீரமைக்கப்பட்டது. மேலும் மழை நீர் தேங்காமல் வெளியேறும் வகையில் வாறுகால் அமைக்கப்பட்டு அதில் இரும்பு மூடி பொருத்தும் பணி நடந்தது.இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பணிகளை கமிஷனர் சரவணன், பொறியாளர் ராமலிங்கம், உதவி பொறியாளர்கள் ரமேஷ், அழகேஸ்வரி பார்வை யிட்டனர்.