போட்ட சில நாட்களிலேயே ரோடு சேதம்
விருதுநகர்: விருதுநகர் நான்கு வழிச்சாலையில் இருந்து பாவாலி செல்லும் ரோடு போட்ட சில நாட்களிலேயே சேதமாகி தார் பெயர்ந்துள்ளது.விருதுநகர் நான்கு வழிச்சாலையில் இருந்து பாவாலி செல்லும் ரோடு உள்ளது. இதில் ரோட்டின் குறுக்காக செல்லும் ஓடையின் மேல் பாலம் கட்டப்பட்டு வந்தது. பால பணிகள் முடிந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ரோடு போடப்பட்டது. இந்நிலையில் ரோட்டின் தார் பெயர்ந்துள்ளது. போட்ட சில நாட்களிலேயே இது போன்று ரோடு சேதமானது பாவாலி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. எனவே போட்ட வேகத்தில் சேதமான ரோட்டை சீரமைக்க வேண்டும். மாவட்டத்தில் இது போன்ற அடிக்கடி போடப்பட்ட சில நாட்களிலே சேதமாவது அதிகரித்து வருகிறது. பொறியாளர்கள் ஆய்வு செய்த பின்பும் பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலே இது போன்று ரோடு சேதமாவது வாடிக்கையாக உள்ளது.