உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலரில் பறக்கும் பள்ளி மாணவர்கள்

டூவீலரில் பறக்கும் பள்ளி மாணவர்கள்

ராஜபாளையம் : ராஜபாளையம் சுற்று பகுதிகளில் டூவீலரில் பறக்கும் சிறுவர்களால் விபத்து அதிகரித்து வருவதை போலீசார் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். பள்ளி ,கல்லுாரி விடுமுறை தொடங்கியுள்ளதால் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், சிறுவர்கள் லைசென்ஸ் இல்லாமல் டூவீலர்களில் பறப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.மோட்டார் வாகன விதிமுறைப்படி 18 வயது நிறைவடைந்த பின்பு லைசென்ஸ் வழங்க படும். விடுமுறை தொடங்கியுள்ளதால் அதிக திறன் கொண்ட டூவீலர்களை பெற்றோரிடம் வலுக்கட்டாயமாக வாங்கிச் செல்லும் மாணவர்கள் சிறுவர்கள் அசுர வேகத்தில் சாலைகளில் பறந்து வருகின்றனர். லைசென்ஸ் இன்றி டூவீலர்களில் செல்லும் சிறுவர்கள் விபத்து ஏற்படுத்தினால் புதிய சாலை விதிகளின்படி வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் தான் முழு பொறுப்பு. கடந்த 10 நாட்களுக்குள் ராஜபாளையம் சொக்கநாதன் புத்துார், சத்திரப்பட்டி என சிறுவர்கள் டூவீலர்களை ஓட்டி விபத்தினால் இருவர் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி இருப்பதுடன் சிறுவர்கள் நான்கு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.இது போன்ற சூழலில் விபத்து ஏற்படும் போது இன்சூரன்ஸ் தொகை கிடைக்க வழி இல்லை. விபரீதம் தெரியாமல் வீதிகளில் சுற்றி வரும் சிறுவர்களால் சாதாரண வாகன ஓட்டிகள் பாதிப்பதால் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன் பெற்றோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ