உள்ளூர் செய்திகள்

அறிவியல் தினம்

காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பாக அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார்.கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கில தலைப்புகளில் செயல்முறை விளக்கப் போட்டி, அறிவுத்திறன் போட்டி, நெருப்பில்லாத சமையல் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கணினி துறை டீன் சிவரஞ்சனி, முதலாம் ஆண்டு பேராசிரியர்கள் மோகனலட்சுமி, ரமேஷ், ஜெயலட்சுமி, ரேவதி, தேவராஜன், ரமேஷ் கண்ணன், லட்சுமி நாராயணன், கார்த்திக் குமார், ஷேக் மைதீன், சிவபாரதி, மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை