உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னறிவிப்பின்றி வரி உயர்வு செலுத்தாத காப்பகங்களுக்கு சீல் வைப்பு

முன்னறிவிப்பின்றி வரி உயர்வு செலுத்தாத காப்பகங்களுக்கு சீல் வைப்பு

ராஜபாளையம்; ராஜபாளையம் நகராட்சியில் வாகன காப்பங்களுக்கான வரி முன்னறிவிப்பின்றி பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் வரி செலுத்தவில்லை எனக் கூறி அதிகாரிகள் சீல் வைத்து வருவதால் வாகன காப்பகம் நடத்துபவர்கள் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன், பஞ்சு மார்க்கெட் சத்திரப்பட்டி ரோடு என 30 வாகன காப்பகங்கள் செயல்படுகின்றன. நகராட்சி சார்பில் காப்பகங்களுக்கு இடத்தை பொறுத்து ரூ.ஆயிரம் முதல் 8000 வரை வரி விதிக்கப்பட்டு வந்துள்ளது. 2024---25 நிதி ஆண்டிற்கான வரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வாகன காப்பகம் நடத்துபவர்கள் வரி செலுத்தி விட்டனர்.அனைத்து வாகன காப்பகங்களுக்கும் 2024-25 க்கு வரி செலுத்தவில்லை எனக் கூறி அபராதத்துடன் ரூ.1 30 லட்சம் வரை செலுத்த கோரி கடந்த வாரம் நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தகுந்த முன்னறிவிப்பின்றி வரி உயர்த்தப்பட்டது குறித்து வாகன காப்பக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நகராட்சி மற்றும் முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அளிக்கப்பட்ட நிலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வாகன காப்பகத்திற்கு வாகனங்கள் உள்ளே நிறுத்தி இருந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து சென்றுள்ளனர்.வாகன காப்பக உரிமையாளர்கள் கூறுகையில்: மார்ச் மாதத்திற்கு முன்னதாக வரி செலுத்தி விட்டோம். இந்நிலையில் தற்போது திறந்த வெளியிலும் தகர செட்டிலும் அமைக்கப்பட்டுள்ள வாகன காப்பகங்களுக்கு வணிக கட்டிடங்களுக்கான வகை பிரிவில் சதுர அடிக்கு ரூ.36 வீதம் வரி விதித்து சராசரியாக ரூ.1.30 லட்சம் என்ற அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை மனு அளித்துள்ள நிலையில் அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.முத்துச்செல்வம், நகராட்சி வருவாய் அலுவலர்: வாகன காப்பகம், பெட்ரோல் பங்க் ஆகியவற்றுக்கு புதிதாக வரி விதிக்க அரசு உத்தரவு விட்டதன் அடிப்படையிலேயே புதிய வரி விதிக்கப்பட்டு வரி செலுத்தாத வாகன காப்பகங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை