கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல்
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சியில் அனுமதியின்றி செயல்பட்ட இரண்டு கழிவுநீர் அகற்றும் வாகனங்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய் துள்ளனர். ராஜபாளையம் நகர் பகுதி சுற்றியுள்ள வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்து செப்டிக் டேங்கில் வெளியேறும் கழிவு நீர் முறையாக வெளியேற்றப்படாமல் கண்மாய்களில் கலக்கப்பட்டு வந்தது. இது குறித்து விவசாய குறைதீர் கூட்டத்தில் விவசாய சங்க தலைவர் ராமச்சந்திர ராஜா கேள்வி எழுப்பி வந்தார். நகராட்சி கமிஷனர் சார்பில் உரிமம் பெற்ற 12 கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வீடுகளில் அகற்றப் படும் கழிவு நீரை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கொண்டு சென்று சுத்திகரிப்பதுடன் தொடர்ந்து காண்காணிப்பதாக பதில் தெரிவித் திருந்தார். இந்நிலையில் நகர்நல அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான சுகாதார பிரிவு அதிகாரிகள் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிய அனுமதி பெற்று செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர். இதில் உரிமம் இன்றி செயல்பட்ட இரண்டு வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.