குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.அருப்புக்கோட்டை எஸ். பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மூலம் பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இதில் 36 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் எஸ்.பி. கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி செயலர் காசி முருகன், பள்ளி தலைவர் ஜெய்கணேசன், தலைமையாசிரியர் ஆனந்தராஜன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.