சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே பாலம்; அக்டோபரில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு
சிவகாசி : சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பணிகள் விறுவிறுப்பாக நடந்து 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் ரூ.61.74 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு 2024 பிப். ல் அடிக்கல் நாட்டப்பட்டு ஜூலை 26 ல் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கியது. 2026 பிப். 15 க்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே தண்டவாளத்திற்கு கிழக்கு பக்கம் 11 துாண்கள், மேற்கு பக்கம் 6 துாண்கள் என மொத்தம் 17 துாண்கள் அமைக்கப்பட்டது. இத்திட்டம் 2026 பிப். 15 க்குள் முடிக்கப்பட்டு பாலம் பயன்பாட்டிற்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ள நிலையில் அக்டோபர் மாதத்தில் பாலம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மேம்பாலப் பணிகளை அசோகன் எம்.எல்.ஏ., சப் கலெக்டர் முகமது இர்பான் பார்வையிட்டனர்.