உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திடக்கழிவு திட்ட துவக்க விழா

திடக்கழிவு திட்ட துவக்க விழா

சாத்துார்: சாத்துார் மேட்டமலை ஊராட்சியில் துாய்மை பாரத இயக்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவக்க விழா நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இத்திட்டத்தின் கீழ் மக்கள் தங்கள் வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரு பிரிவாக பிரித்து சேகரித்து வைத்து துாய்மை காவலரிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஊராட்சியை சேர்ந்த 2000 குடும்பங்களுக்கு 4000 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி