உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிக் தொழிலாளர்களுக்கு இன்று சிறப்பு பதிவு முகாம்

கிக் தொழிலாளர்களுக்கு இன்று சிறப்பு பதிவு முகாம்

விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் செய்திக்குறிப்பு: ஆன்லைன், டெலிவரி போன்ற பணிகளை செய்யும் 'கிக்' தொழிலாளர்களை நலவாரியத்தில் உறுப்பினர்கள் ஆக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று(ஜூலை 19) விருதுநகர் முனிசிபல் ரோட்டில் உள்ள பர்மா ஓட்டல், ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள டேஸ்டி ஓட்டல், சிவகாசி டூ விருதுநகர் ரோடு திருத்தங்கலில் உள்ள அப்பன்ஸ் ரெஸ்ட்ரோ பார்க் ஓட்டல் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளது.பதிவு பெற்ற ஆன்லைன் சார்ந்த 'கிக்' தொழிலாளர்களுக்கு டூவீலர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே ஆன்லைன் சார்ந்த டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவோர் முகாமில் பங்கேற்று பயனடையலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ