மேலும் செய்திகள்
சாத்துாரில் மடிக்கணினி வழங்கும் விழா
9 hour(s) ago
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
9 hour(s) ago
சர்வீஸ் ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் தொற்று அபாயம்
9 hour(s) ago
சிவகாசி மாநகராட்சியில் 60 சதவீத வரி வசூல்
9 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் திருட்டுக்கள், விபத்துக்கள் உட்பட பல்வேறு குற்றங்களை தடுக்க 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. நகரில் கடந்த ஆண்டு போலீசாருக்கு சவால் விடும் வகையில் தன்யா நகர், முல்லை நகரில் திருட்டு சம்பவங்கள் நடந்தது. இதனையடுத்து உள்ளூர் போலீசார் மட்டுமின்றி குற்றப்பிரிவு போலீசாரும் இரவு, பகலாக ஓய்வின்றி ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர்.இருந்தபோதிலும் பல்வேறு பாதுகாப்பு பணி காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வெளிமாவட்டங்களுக்கு செல்வதால், கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்படுகிறது.மேலும் மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் தினமும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் நகரில் திருட்டு சம்பவங்களைம், விபத்துகளையும் தடுக்கும் வகையில் அனைத்து வழித்தடத்தில் உள்ள ரோடுகளில் 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஒட்டுமொத்த நகரையே மூன்றாவது கண்ணாக விளங்கும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago