உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்..

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..

சாத்துார்: சாத்துார் அருகே சின்னக் கொல்லப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.ஆர்.டி.ஓ கனகராஜ் தலைமை வகித்தார். தாசில்தார் ராஜா மணி முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துறை, வேளாண்மை , மின்சார வாரியம், வருவாய்த்துறை, மக்கள் நல்வாழ்வு துறை, ஊட்டச்சத்து துறை அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக் கொண்டனர். வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் முகாமை பார்வையிட்டு மக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது மக்கள் தங்கள் பகுதிக்கு முறையான ரோடு, வாறுகால் , தெருவிளக்கு வசதி இன்றி அவதிப்படுவதாக மனு கொடுத்தனர். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அமைச்சர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்திரவிட்டார். முகாமில் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !