உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மரியன் ஊருணி பூங்காவில் எரியாத தெருவிளக்குகள்

மரியன் ஊருணி பூங்காவில் எரியாத தெருவிளக்குகள்

சாத்துார் : சாத்துார் மரியன் ஊருணி பூங்காவில் எரியாத தெரு விளக்குகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். மரியன் ஊருணி பூங்கா நகர் மக்களின் பொழுது போக்கு பூங்காவாக உள்ளது. இங்கு காலை மாலை நேரங்களில் அதிக அளவிலான மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதோடு இந்த பூங்காவில் அமைந்துள்ள விளையாட்டு கருவிகளில் சிறுவர்களும் இளைஞர்களும் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஊருணி பூங்காவில் உள்ள எல்இடி தெருவிளக்குகள் பழுதான நிலையில் எறியாமல் உள்ளன. அதிகாலையில் இங்கு நடை பயிற்சி மேற்கொள்ள வருபவர்கள் இருள் சூழ்ந்த நிலையில் நடைமேடையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் மாலை நேரத்தில் சிறுவர்களுடன் வரும் பெற்றோரும் தெரு விளக்குகள் எரியாத நிலையில் 7:00 மணிக்கு முன்பே பூங்காவை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளது. மேலும் பூங்கா பகுதியில் விஷ பூச்சிகள் நடமாட்டமும் தெருவிளக்கு இல்லாத நிலையில் அதிகரித்து வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் பழுதான தெரு விளக்குகளை சீரமைத்து அனைத்து விளக்குகளையும் எரிய வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை